கல்யாண மேடையில் ‘ஐயர்’ செய்த ‘லூட்டி’; நடிகை நோரா உங்களுக்கு என்ன முறை வேண்டும்?.. சிரிப்பலையில் மூழ்கிய மணப்பெண், உறவினர்கள்

 

புதுடெல்லி: திருமண விழாவில் மந்திரம் ஓத வந்த புரோகிதர் ஒருவர், பாலிவுட் நடிகை நோரா பதேஹியைப் பற்றி மணமகனிடம் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் திருமண வைபவங்கள் பொதுவாகத் தீவிரமான சடங்குகளுடன் நடைபெறும் நிலையில், சமீபகாலமாகத் திருமண மேடைகளில் நடக்கும் வேடிக்கையான நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாகி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், மந்திரம் ஓத வந்த புரோகிதர் ஒருவர், அனுபவம் வாய்ந்த நிகழ்ச்சித் தொகுப்பாளரைப் போல மாறிச் செய்த கலாட்டா தற்போது இணையத்தில் 7 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பார்க்கப்பட்டுப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

‘ஜிம்மி__02’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில் புரோகிதரின் நகைச்சுவை உணர்வை அனைவரும் பாராட்டி வருகின்றனர். திருமணச் சடங்குகளின் போது கையில் மைக்கை பிடித்துக்கொண்டு புரோகிதர் மணமகனிடம் ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர், ‘அந்தக் கணக்குப்படி பார்த்தால் நடிகை நோரா பதேஹி உங்களுக்கு என்ன முறை வேண்டும்?’ என்று அதிரடியாகக் கேள்வி எழுப்பினார். இதைக் கேட்டுத் திகைத்துப்போன மணமகன் சற்று யோசித்துவிட்டுத் தயங்கியபடியே, ‘சகோதரி முறை வேண்டும்’ என்று பதிலளித்தார்.

உடனே அந்தப் புரோகிதர், ‘இல்லை… அம்மா முறை வேண்டும்; அவர் உங்களை விட வயதில் மிகவும் பெரியவர்; எங்குப் பார்த்தாலும் காலில் விழுந்து கும்பிடுங்கள்’ என்று நகைச்சுவையாகக் கூறினார். புரோகிதரின் இந்த எதிர்பாராத பதிலை கேட்டு அருகில் இருந்த மணப்பெண் மற்றும் உறவினர்கள் அனைவரும் சிரிப்பை அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்தனர்.

Related Stories: