புதுடெல்லி: தெரு நாய்கள் தொடர்பான தாமாக முன்வந்து பதிவு செய்யப்பட்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் மூன்றாவது நாளாக நேற்றும் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்திப் மேத்தா மற்றும் என்.வி.அஞ்சார்யா ஆகியோர் அடங்கிய அமர்வில் சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து விலங்கு நல ஆர்வலர்கள் தரப்பில் ஆஜராகிய இருந்த மூத்த வழக்கறிஞர் மகாலட்சுமி பவானி,\\” நாய்களுக்கு உணவளிக்கும் நபர்கள் மீது வன்முறையில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
சமீபத்தில் காசியாபாத்தில் நாய்க்கு உணவளித்த ஒரு பெண்ணை சிலர் தாக்கினர். இதுபற்றி முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள்,” பெண்கள் மீதான நடத்தப்படும் வன்முறை சம்பவம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தால், உரிய காவல்நிலையம் வழக்கு பதிவு செய்து, உடனடியாக எப்.ஐ.ஆர் பதிவு செய்து வழங்க வேண்டும். அதேப்போன்று மாநில உயர்நீதிமன்றங்களை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
