மகரவிளக்கு பூஜை ஆன்லைன் முன்பதிவு இல்லாமல் வரும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருவனந்தபுரம்: பத்தனம்திட்டா மாவட்ட எஸ்பி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு வரும் 13ம் தேதி 35 ஆயிரம் பேருக்கும், 14ம் தேதி 30 ஆயிரம் பேருக்கும் மட்டுமே ஆன்லைன் மூலம் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் ஆன்லைன் முன்பதிவில்லாத பக்தர்கள் எந்தக் காரணம் கொண்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். 14ம் தேதி காலை 9 மணிக்குப் பின்னர் நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றார்.

Related Stories: