தமிழ்நாட்டில் திருமழிசை 21 மாநிலங்களில் 26 புதிய நகரங்கள்: ஒன்றிய அரசுக்கு பரிந்துரை

புதுடெல்லி: தமிழ்நாட்டில் திருமழிசை உள்பட 21 மாநிலங்களில் இருந்து 26 புதிய நகரங்களை உருவாக்க பரிந்துரை வந்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுபற்றி மாநிலங்களவையில் ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்புறவளர்ச்சித்துறை இணை அமைச்சர் கவுசால் கிஷோர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:  நாட்டில் நகர்ப்புற விரிவாக்கத்திற்கான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய நகரங்களை உருவாக்க 21 மாநிலங்களிடமிருந்து 26 பரிந்துரைகள் வந்துள்ளன. ஆனால் 15 வது நிதி ஆணையம் 8 புதிய நகரங்களை உருவாக்க ரூ. 8,000 கோடியை ஒதுக்கியுள்ளது . இதன் மூலம் ஒவ்வொரு புதிய நகரத்திற்கும் கிடைக்கும் தொகை ரூ 1,000 கோடி ஆகும்.  இந்த நிதியின் மூலம் ஒரு மாநிலம் ஒரு புதிய நகரத்தை மட்டுமே உருவாக்க முடியும்.

வடகிழக்கு மற்றும் மலை மாநிலங்களில் உள்ள சிறிய நகர்ப்புற மக்களைக் கருத்தில் கொண்டு, இரண்டு வெவ்வேறு மாநிலங்களுக்கு இரண்டு புதிய நகரங்களுக்கு தலா ரூ. 500 கோடி வீதம் ரூ.1,000 கோடி முன்மொழியப்பட்டுள்ளது. தமிழ்நாடு சார்பில் திருமழிசை நகரம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஒன்றிய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய்பட் நேற்று எழுத்து மூலம் அளித்த பதில்: நாடு முழுவதும்முப்படைகளில் 1.55 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன. அதிகபட்சமாக ராணுவத்தில் 1.36 லட்சம் காலியிடங்கள் உள்ளன. 8,129 அதிகாரிகள் பணியிடம் காலயாக உள்ளன. ராணுவ நர்ஸ் பணியிடம் 509 காலியாக உள்ளது.

Related Stories: