ஒரு லட்சம் பழனிசாமிகள் இல்லை அதிமுகவில் இருப்பது ஒரு லட்சம் துரோகிகள்: டிடிவி.தினகரன் காட்டம்

திருச்சி: ஒரு லட்சம் பழனிசாமிகள் இருப்பதாக எடப்பாடி கூறியிருக்கிறார், ஆனால் அதிமுகவில் ஒரு லட்சம் துரோகிகள் இருக்கிறார்கள் என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று டிடிவி. தினகரன் காட்டமாக பதில் அளித்துள்ளார்.

திருச்சியில் அமமுக தலைவர் டிடிவி தினகரன் நேற்று அளித்த பேட்டி: சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக எடப்பாடி தரப்பில் யாரும் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. அதற்கு காரணம் பதவி வெறியாலும், ஒரு சிலருடைய சுயநலத்தாலும், ஜெயலலிதா இயக்கம் பலவீனமாகி கொண்டு இருக்கிறது. உண்மையான தொண்டர்கள் விரைவில் அதை மீட்டெடுப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுகவில் இந்த பழனிச்சாமி இல்லை என்றால் அடுத்த பழனிச்சாமி வருவார். இப்படி ஒரு லட்சம்  பழனிசாமிகள் உள்ளதாக கட்சி நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசியது பற்றி கேட்டதற்கு,  அதிமுகவில் ஒரு லட்சம் பழனிசாமிகள் உள்ளனர் என்ற கருத்தை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் என்றால் அதிமுகவில் ஒரு லட்சம் துரோகிகள் இருக்கிறார்கள் என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அமமுகவில் உள்ளவர்கள் கட்சி மாறுகிறார்கள் என்றால் அதற்கு பல காரணங்கள் உள்ளது. ஒரு சிலர் தன்னுடைய சொந்த பிரச்னைகளுக்காகவும், பதவிக்காகவும் செல்கிறார்கள். அந்த இடங்களுக்கு நல்ல தகுதியானவர்கள் உடனடியாக தேர்வு செய்யப்படுவர் என்றார்.

Related Stories: