சேலம்: பாமக முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்தவர் மறைந்த காடுவெட்டி குரு. இவரது மகள் விருதாம்பிகை ‘ஜெ.குரு பட்டாளி மக்கள் கட்சி’ என்ற பெயரில், புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த கட்சியின் துவக்க விழா நேற்று நடைபெறும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், நேற்று தொங்கப்படவில்லை. தவிர்க்க முடியாத காரணங்களால் இன்று ஓமலூரில் தொடக்க விழா இன்று நடக்கிறது. கட்சி தொடங்கியவுடன், சேலம் மாவட்டத்தில் தனது சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பையும் வெளியிட உள்ளார் விருதாம்பிகை. ‘நம் மக்களை ஒருங்கிணைக்க, நம் இல்லங்களை தேடி மாவீரன் மகள் குரு விருதாம்பிகை’ வருகிறார் என்ற பெயரில் இதனை அறிவித்துள்ளார். அன்புமணி-ராமதாஸ் மோதலால் பிரிந்து நிற்கும் நிர்வாகிகள், ஆதரவாளர்களை குறிவைத்து விருதாம்பிக்கை கட்சி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பாமகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
‘ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி’
- ஜே. குரு பட்டாலி மக்களவைத் கட்சி
- சேலம்
- பமகா முன்னணி
- விருதம்பிகி 'ஜே.
- குரு பட்டாலி மக்களவைத் கட்சி
- தேர்தல் ஆணையம்
