சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளனர். ஆட்சியில் பங்கு பெறுவதில் எந்த சமரசமும் இல்லை என பாஜக கூறும் நிலையில் எடப்பாடி நயினார் சந்திப்பு நடைபெறுகிறது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கே.டி.ராகவன், கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் சந்தித்தனர்.
