ஏப்ரல் 29ம் தேதி முதல் இந்தியா, இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை

கொழும்பு:  இந்தியா, இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை ஏப்ரல் மாதம் முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்புவில், யாழ்ப்பாணம்-  காரைக்கால் பயணிகள் கப்பல் போக்குவரத்து குறித்து இலங்கை கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிமால் சிறிபாலா டி சில்வா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  அதன்படி, வரும் ஏப்ரல் 29ம் தேதி முதல் காங்கேசன் துறைமுகத்தில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இலங்கை அமைச்சர் நிமால் சிறிபாலா டி சில்வா  கூறியதாவது, “முதற்கட்டமாக 120 பயணிகள் வரை பயணிக்கவும், ஒவ்வொரு பயணியும் தலா 100 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்து செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயண கட்டணம் ரூ.9878” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: