ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் ஜூக்கர்பெர்க் - பிரிசில்லா தம்பதிக்கு 3வது பெண் குழந்தை

வாஷிங்டன்: மார்க் ஜூக்கர்பெர்க் - பிரிசில்லா தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. உலகின் மிப்பெரிய சமூக வலைதள நிறுவனமான ‘மெட்டா’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் - பிரிசில்லா தம்பதிக்கு ஏற்கனவே மேக்சிமா (7), அகஸ்டஸ் (5) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மார்க் ஜூக்கர்பெர்க்கின் மனைவி பிரிசில்லா சானுக்கு 3வது முறையாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

 அந்த குழந்தையின் பெயர் அவுரேலியா சான் என்று வைத்துள்ளனர். புதிதாகப் பிறந்த மகளுடன்  இருக்கும் புகைப்படத்தைப் மார்க் ஜூக்கர்பெர்க் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ஜூக்கர்பெர்க்கின் மூன்று மகள்களின் பெயர்கள் மிகவும் சுவாரஸ்யமானவை.  மேலும் இந்த பெயர்களுடன் ரோமன் மன்னர்களின் வாழ்க்கை வரலாற்றுடன் தொடர்புடையவை. இது தொடர்பாக தனது வரலாற்று ஆர்வத்தை ஜூக்கர்பெர்க் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதன்படிதான் லத்தீன் மற்றும் ரோமானிய பேரரசர்களின் பெண் குழந்தைகளின் பெயர்களை தனது மூன்று குழந்தைகளுக்கும் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: