ஸ்பெயின்: ஸ்பெயினில் உள்ள வலென்சியா மாகாணத்தில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீயால் பல்லாயிரம் மரங்கள் எரிந்து சாம்பலாகி வருகின்றன. விளானிவாதி விவேர் என்ற இடத்தில் உள்ள பரந்து விரிந்த வனப்பகுதியில் நேற்று பற்றிய காட்டுத் தீ ராக்கெட் வேகத்தில் பரவி வருகிறது. தீ வேகமாக பரவுவதால் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 15 சிறிய ரக விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகிறது.