18 குழந்தைகள் பலி உபி மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமம் ரத்து

நொய்டா:  உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் பலியானதையடுத்து உபி மருந்து நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான மரியோன் பயோடெக் தயாரித்த இருமல் மருந்தைக் குடித்த 18 குழந்தைகள் பலியானதாக கடந்த டிசம்பரில் உஸ்பெகிஸ்தான் அரசு தெரிவித்தது. சோதனைகளில் எத்திலீன் கிளைகோல் என்ற நச்சுப் பொருள் கலந்திருப்பது தெரியவந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து மரியோன் பயோடெக் நிறுவனத்தின் மருந்தை  சண்டிகரில் உள்ள  ஆய்வு கூடத்தில் அனுப்பி பரிசோதிக்கப்பட்டது. சோதனையில் மருந்தில் கலப்படம் செய்திருப்பது தெரியவந்தது. மரியோன் பயோடெக் நிறுவனத்தின் இயக்குனர்கள்,ஊழியர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.இந்நிலையில் மரியோன் பயோடெக் நிறுவனத்தின் உரிமத்தை உபி அரசு நேற்று ரத்து செய்துள்ளது.

Related Stories: