தஜிகிஸ்தான் நாட்டில் 5.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்

தஜிகிஸ்தான்: தஜிகிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. தஜிகிஸ்தான் நாட்டின் நோவோபோட நகரில் இருந்து 51 கிமீ தொலைவில் பதிவான இந்த நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் 5.6 கி.மீ ஆழத்திலும், ரிக்டர் அளவில் 5.9 ஆகவும் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

தெற்கு ஆசியாவின் பல நாடுகளில் நேற்று இரவு நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, சீனா உள்பட 10க்கும் அதிகமான நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அதிகபட்சமாக பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத்தில் 7.7 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியது.

இந்தியாவில் கடந்த 21ம் தேதி இரவு டெல்லியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அதிர்ந்து விழுந்த நிலையில் பொதுமக்கள் வீடுகளை விட்டு திறந்த வெளியில் தஞ்சமடைந்து பெரும் பீதியில் உறைந்தனர்.

இந்நிலையில் தஜிகிஸ்தான் நாட்டின் நோவோபோட நகரில் இருந்து 51 கிமீ தொலைவில் பூமிக்கு அடியில் 5.6 கி.மீ ஆழத்தில், ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இதையடுத்து தஜிகிஸ்தானில் மீண்டும் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தேசிய புவியதிர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது.ரிக்டர் அளவில் 4.4 ஆக தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பூமிக்கடியில் 114 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: