அமெரிக்காவில் வெள்ளம் ரயில் தடம் புரண்டு விபத்து

சாந்தகுரூஸ்: அமெரிக்காவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அமெரிக்காவின்  தெற்கு கலிபோர்னியா, பலத்த  மழை பெயத்து. இதில் பெரும்பாலான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதில் 2 பேர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சாந்தகுரூஸ் கவுன்டியில் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் பலத்த சூறை காற்று வீசியது. இந்நிலையில், போர்டா கோஸ்டா அருகே தண்டவாளத்தில் விழுந்து கிடந்த மரங்களில் சிக்கி, 55 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் எதுவுமில்லை.

Related Stories: