சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு இலங்கை நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும்: அதிபர் விக்ரமசிங்கே வலியுறுத்தல்

கொழும்பு: இலங்கைக்கு கடனுதவி வழங்குவது தொடர்பாக  சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அதிபர் ரணில் விக்ரமேசிங்கே வலியுறுத்தி உள்ளார்.  பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை அரசுக்கு  சர்வதேச நாணய நிதியம் 4 ஆண்டுகாலத்தில் 3 பில்லியன் டாலர் அதாவது ரூ.24 ஆயிரம் கோடி கடனுதவி வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. முதல் கட்டமாக ரூ.2727 கோடியை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நாடாளுமன்றத்தில் கூறுகையில், ‘‘சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியை பெறுவது இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், நாட்டை மேம்படுத்துவதற்கும் உதவும். வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும். திவால் பிம்பத்தை முடிவுக்கு கொண்டு வரும். வலுவான புதிய பொருளாதாரத்திற்கான அடித்தளத்தை உருவாக்கும். நாம் புதிய பயணத்தை தொடங்குகிறோம். சர்வதேச நாணய நிதியம் உடனான ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்றம் அனுமதி அளிக்க வேண்டும். அப்போதுதான் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தைக்கு செல்ல முடியும்” என்றார்.

Related Stories: