டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் பாதுகாப்பை விலக்கியது ஒன்றிய அரசு

டெல்லி: டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் முன்பு போடப்பட்ட போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது. இந்தியாவுக்கான பிரிட்டிஷ் தூதர் இல்லம் முன்பு போடப்பட்ட பாதுகாப்பையும் விலக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. லண்டனில் இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் அண்மையில் தாக்குதல் நடத்தினர். லண்டனில் இந்திய தூதரகத்துக்கு உரிய பாதுகாப்பு தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பாதுகாப்பு வாபஸ் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: