கல்லூரி மாணவியிடம் செயின் பறித்தவர் கைது

சென்னை: புரசைவாக்கத்தில் கல்லூரி மாணவியிடம் செயின் பறித்த வாலிபரை் 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். புரசைவாக்கம் சூளை பகுதியை சேர்ந்தவர் ருத்ரவாணி (19). இவர், கல்லூரி ஒன்றில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 19ம் தேதி புரசைவாக்கம் பகுதியில் உள்ள பிரபல துணிக்கடைக்கு சென்று விட்டு, இரவு சக மாணவிகளுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த வாலிபர் ஒருவர், முகவரி கேட்பது போல் நடித்து, ருத்ரவாணி கழுத்தில் கிடந்த ஒன்றரை சவரன் செயினை பறித்து கொண்டு தப்பினார்.

இதுகுறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை நடத்திய போது, தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த பழைய குற்றவாளி வினோத்குமார் (26) என தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார், வினோத்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒன்றரை சவரன் செயின் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: