காங்கிரசில் கோஷ்டி மோதல் திருச்சி நிர்வாகிக்கு வெட்டு

திருச்சி: திருச்சி பொன்மலைப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அர்ஜுன் (35). திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொது செயலாளரான இவர், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினியிடம் நேற்று மனு அளித்தார். அதில், காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாசலம் மன்றத்தில் நேற்று (நேற்றுமுன்தினம்) நடந்த தேர்தல் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றேன். அப்போது சிறப்பு விருந்தினரை வரவேற்க மன்றத்தின் வாசலில் காத்திருந்தபோது அங்கு டூவீலரில் வந்த காங்கிரஸ் மாநகர் மாவட்ட கோட்ட தலைவர் தென்னூர் ராமசந்திராபுரம் ராகவேந்திரா(36) என்பவர், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு தொடர்பாக என்னை பட்டாக்கத்தியால் தலையில் வெட்டினார். மேலும் என்னையும், எனது தாய், சகோதரியையும் தரக்குறைவாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றார். எனவே சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

Related Stories: