செம்மரக் கட்டைகள் பறிமுதல்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே உள்ள கொடிவலசா காலனியில் தனியார் பள்ளி பின்புறம் மலைப்பகுதியில், காரில் செம்மரம் கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி காவல் ஆய்வாளர் இளங்கோ, போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு காரில் இருந்த சுமார் அரை டன் செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்து, பள்ளிப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரத்தின் மதிப்பு ரூ.25 லட்சம் என்று கூறப்படுகிறது.

Related Stories: