10ம் வகுப்பு தேர்வுக்கு 27ம் தேதி ஹால்டிக்கெட்: தேர்வுகள் துறை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் இயங்கும் பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தில் 10 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில், 10 லட்சம் மாணவ-மாணவியர் இந்த தேர்வில் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகள் 27ம் தேதி பிற்பகல் www.dge.tn.gov.in  என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். அந்தந்த பள்ளிகளின் நிர்வாகிகள் இணைய தளத்தில் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் பயன்படுத்தி் மாணவர்கள் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.10 வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவ- மாணவியரின் பெயர்ப்பட்டியலில் மாணவ மாணவியரின் பெயர், பிறந்த தேதி, மொழி ஆகிய திருத்தங்கள் ஏதாவது இருந்தால் சம்பந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர்களை அணுகி தேர்வு மையத்துக்கான பெயர்ப்பட்டியலில் உரிய திருத்தங்கள் செய்ய  பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களிடம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.

Related Stories: