புதுச்சேரி அரசு துறைகளில் ரூ.10,000 ஊதியம் பெறும் தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.15,000 ஆக ஊதிய உயர்வு: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு துறைகளில் ரூ.10,000 ஊதியம் பெறும் தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.15,000 ஆக ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் பணி புரியும் தற்காலிக ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்காலிக ஊழியர்களின் ஊதியம் ரூ.10,000-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். பணி நிரந்தரம் கோரி தற்காலிக ஊழியர்கள் போராட்ட நடத்திய நிலையில் ஊதியத்தை முதல்வர் ரங்கசாமி உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் மக்கள் மிகவும் பொருளாதர நெருக்கடியில் இருந்து வருகின்றனர். இதனால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றது. புதுவை அரசின் தற்காலிக பணியாளர்களுக்கு முன்னதாக மாத ஊதியமாக ரூ.10,000 வழங்கப்பட்டு வந்தது.  இதனை உயர்த்தி தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். தற்காலிக ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக அவர்களின் மாத ஊதியம் ரூ.15,000ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுவை அரசின் இந்த அறிவிப்பினால் தற்காலிக ஊழியர்கள் அரசுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

Related Stories: