திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 22ம் தேதி உகாதி ஆஸ்தானம்

திருமலை:  திருப்பதி ஏழுமலையான்   கோயிலில் மார்ச் 22ம் தேதி   உகாதி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு முதலில் சுப்ரபாதம் செய்து பின்னர்  காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் மலையப்பசுவாமி, விஷ்வக்சேனதிபதிக்கு சிறப்பு பிரசாதம் சமர்பிக்கப்படும். காலை 7 மணி முதல் 9 மணிக்குள் விமான பிரகாரம் மற்றும் கொடிமரத்தை சுற்றி ஊர்வலமாக சென்று கோயிலுக்குள் செல்ல உள்ளனர். அதன்பின், ஏழுமலையான் கோயிலில் மூலவருக்கும், உற்சவமூர்த்திக்கும் புது வஸ்திரம் அணிவிக்கப்படும்.  அதன் பிறகு பஞ்சாங்கம் படிக்கப்பட உள்ளது.

கருடாழ்வார் சன்னதி அருகே ஆகம பண்டிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள்  உகாதி ஆஸ்தானம்  நடத்தப்பட உள்ளது. உகாதி ஆஸ்தானத்தையொட்டி ஏழுமலையான்  கோயிலில் வருகிற 22ம் தேதி  கல்யாண உற்சவம், ஊஞ்சல்சேவை மற்றும் ஆர்ஜித சேவையை  தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. திருமலை ஏழுமலையான்   கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் 21ம் தேதியும் (நாளை), உகாதி ஆஸ்தானம் 22ம் தேதியும் நடைபெற உள்ளதால்  இந்த 2 நாட்களிலும் விஐபி தரிசனம் ரத்து  செய்யப்பட்டுள்ளது.

எனவே  இன்றும், நாளையும் விஐபி  தரிசனத்திற்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. 36 மணி நேரம் காத்திருந்து  தரிசனம்: திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  நேற்று வைகுண்டம் காத்திருப்பு அறை முழுவதும் நிரம்பி டிபிசி வரையில் பக்தர்கள் காத்திருந்தனர். இவர்கள் சுமார் 36 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Related Stories: