ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 370 சிறப்பு சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு முதன்முறையாக நேரடி அந்நிய முதலீட்டில் புதிய கட்டிடங்களுக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவு கடந்த 2019ம் ஆண்டு நீக்கப்பட்டது. அதன் பிறகு ஜம்மு காஷ்மீரின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. அதன்ஒரு பகுதியாக, நேரடி அந்திய முதலீட்டின்கீழ், ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் வணிக வளாகமும், பன்னோக்கு கோபுரமும் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.