நடிகை ரம்யா மாண்டியா தொகுதியில் போட்டி?.. கர்நாடகா காங்கிரசில் பரபரப்பு

பெங்களூரு: பிரபல நடிகை ரம்யா மாண்டியா தொகுதியில் போட்டியிட உள்ளதாக கர்நாடக மாநில காங்கிரஸ் வட்டாரத்தில் ேபசப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் சட்டப் பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக உள்ளன. அந்த வரிசையில் பிரபல கன்னட நடிகையான திவ்யா ஸ்பந்தனா என்ற ரம்யாவை மாண்டியா ெதாகுதியில் களமிறக்க மாநில காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது.

இறுதி பட்டியலை தேசிய தலைமை தேர்வு செய்யும் என்பதால், வேட்பாளராக ரம்யா அறிவிக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக பிரிவில் பணியாற்றிய ரம்யா, அவ்வப்போது அதிரடி கருத்துகளை தெரிவித்து தேசிய அளவில் பேசப்பட்டார். இருப்பினும், கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருந்தார். இவர் மீது பணமோசடி குற்றச்சாட்டுகளும் எழுந்தன. ஆனால் அவர் மறுத்து வந்தார்.

இந்த நிலையில் அவர் மாண்டியா தொகுதியில் அவரை களமிறக்க மாநில தலைமை ஆர்வம் காட்டி வருவதால், அந்த ெதாகுதியானது மதசார்பற்ற ஜனதா தளத்துக்கும் காங்கிரஸுக்கும் இடையேயான போட்டியாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த தொகுதியானது மதசார்பற்ற ஜனதா தளத்தின் கோட்டையாக இருப்பதால் ரம்யாவின் போட்டியானது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

Related Stories: