டயட்டீஷியனுக்கு ரூ.1 லட்சம் சம்பளம் தருவது தப்பா?...டாப்ஸி கோபம்

மும்பை: டயட்டீஷியனுக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் தந்தால் தவறா என நெட்டிசன்களை கடிந்து கொண்டார் நடிகை டாப்ஸி. தமிழ் சினிமாவிலிருந்து இந்திக்கு சென்ற டாப்ஸி, அங்கு முன்னணி நடிகையாக உள்ளார். இப்போது ஷாருக்கான் ஜோடியாக டன்கி இந்தி படத்தில் நடித்து வருகிறார். இவர் தனது டயட்டீஷியனுக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் தருவதாக சொல்லியிருந்தார். இதை நெட்டிசன்கள் கலாய்த்து கமென்ட் போட்டிருந்தனர். இது குறித்து டாப்ஸி கூறியது: எனது உடல்வாகு, ஏற்றம் இறக்கம் இல்லாமல், ஒரே மாதிரியாக இருப்பதை பலரும் பார்த்து வியக்கிறார்கள். அதற்கு காரணம், நான் முறையான டயட்டில் இருப்பதுதான்.

என்னை சரியாக டயட்டில் வைத்திருந்து, எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக் கூடாது என்றெல்லாம் தயார்படுத்துவது எனது டயட்டீஷியன் தான். அவருக்கு சம்பளமாக மாதம் ரூ.1 லட்சம் தருகிறேன். இதில் என்ன தப்பு இருக்கிறது? வயது ஆக ஆக, நமது உடல் நிலை ஒரே மாதிரியாக இருக்காது. அந்த சமயத்தில் மருத்துவமனைகளுக்கு பல லட்சம் செலவிடுவதை விட, இப்போதே உடல் நிலையை பாதுகாக்க டயட்டீஷியனை வைப்பதில் என்ன தவறு இருக்கப்போகிறது. அதே நேரம், எனது அப்பாவுக்கு நான் டயட்டீஷியனுக்காக இவ்வளவு செலவு செய்கிறேன் என தெரிந்தால் கோபப்படுவார். அவர் கோபப்படுவதிலும் என்னை விமர்சிப்பதிலும் அர்த்தம் இருக்கிறது. மற்றவர்கள் ஏன் இது பற்றி கவலைப்படுகிறீர்கள்? இவ்வாறு டாப்ஸி கூறினார்.

Related Stories: