நாராயண்பூர்: சட்டீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் அப்ஹஜ்மத் காட்டுப்பகுதியில் நாராயணன்பூர், கான்கெர், தண்டேவாடா மற்றும் கொன்டகோன் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த ரிசர்வ் போலீசார் மற்றும் சிறப்பு படையினர், இந்தோ-திபெத் எல்லை வீரர்கள் இணைந்து நக்சல்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த நக்சல்கள் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனை தொடர்ந்து வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதில் 8 நக்சல்கள் கொல்லப்பட்டனர். மேலும் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். அந்த பகுதியில் தொடர்ந்து நக்சல்களுக்கும் வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்து வருகின்றது.
The post சட்டீஸ்கர் என்கவுன்டரில் 8 நக்சலைட்கள் பலி; ஒரு வீரர் வீரமரணம் appeared first on Dinakaran.