மபியில் கல்லூரிக்குள் நுழைந்து பேராசிரியர் மீது தாக்குதல்

போபால்: மத்தியப்பிரதேசத்தின் போபாலில் அரசு ஜேஎச் கல்லூரியில் நுழைந்த கும்பல் ஒன்று அங்குள்ள சமஸ்கிருத துறைக்கு சென்றுள்ளது. அங்கு பேராசிரியர் நீரஜ் தகாத் மாணவர்களுடன் கலந்துரையாடிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென நுழைந்த கும்பல் பேராசிரியர் நீரஜ் கண்களில் மிளகாய்தூளை தூவியது. இதில் அவர் நிலைதடுமாறிய நிலையில், தடியினால் அவரை சரமாரியாக தாக்கிய கும்பல் அங்கிருந்து தப்பிசென்றது. அவருக்கு தலை, கை, கால் உட்பட பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.

The post மபியில் கல்லூரிக்குள் நுழைந்து பேராசிரியர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: