தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தனியார் ஆலையில் நன்கொடை கேட்டு மிரட்டிய பாஜக மாநில இளைஞரணி செயலாளர் பூபதி கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வேலவன் பகுதியில் கிருஷ்ணா புளு மெட்டல்ஸ் என்ற தனியார் கிரஷர் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு நேற்று மாலை பாஜக மாநில இளைஞரணி செயலாளர் பூபதி உள்ளிட்டோர் சென்று நன்கொடை கேட்டுள்ளனர். அப்போது பணியில் இருந்த மேலாளர், கிரஷர் ஆலை நிறுவனர் தற்போது இல்லாததால் பிறகு வருமாறு பூபதியிடம் கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்த பாஜகவினர் கொலை மிரட்டல் விடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.