பத்மாவதி தேவியின் மகா ரதோத்ஸவ விழா

ஷிவமொக்கா மாவட்டம், ரிப்பன்பேட்டை பகுதியில் பார்ஸ்வநாத தீர்த்தங்கரர் மற்றும் பத்மாவதி தேவி அம்மன் கோயில் உள்ளது. இங்கு வருடாந்திர மகா ரதோத்ஸவ விழா, ஹோம்புஜ அதிசய மகா கேஷ்டத்தில், மடத்தின் பீடாதிபதி தேவேந்திர கீர்த்தி பட்டாரக் பட்டாச்சார்ய வர்ய சுவாமிகள் முன்னிலையில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. காலை முதல் பூஜைகள் நடந்தன. மதியம் 12 மணிக்கு மகா நைவேத்ய பூஜை, பத்மாவதி தேவி ரதாரோஹணம் நடந்தது. பின்னர் மதியம் 1.31 மணிக்கு மகரதோற்சவம் நடந்தது. தேர் ஊர்வலம் துவங்கியதும், திரண்டிருந்த பக்தர்கள், ‘மேட் பத்மாவதி தேவி கி ஜெ, பார்ஸ்வநாத் சுவாமிஜி கி ஜெ’ என கோஷமிட்டனர். தேருக்கு வாழைப்பழம், பூ, வெற்றிலை பாக்கு வைத்து பக்தர்கள் பூஜை செய்தனர். மாநிலம் மற்றும் வெளி மாநில பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் தேரை இழுத்தனர்.

Related Stories: