நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட சிபிசிஎல் எண்ணெய் குழாய்கள் மே 31க்குள் முழுமையாக அகற்றப்படும்: முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு

நாகை: நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட சிபிசிஎல் எண்ணெய் குழாய்கள் மே 31க்குள் முழுமையாக அகற்றப்படும் என நாகை மீன்வளத்துறை அலுவலத்தில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட சிபிசிஎல் எண்ணெய் குழாயில் கடந்த 2ம் தேதி உடைப்பு ஏற்பட்டடு கச்சா எண்ணெய் கடலில் பரவியது. இதனால் மீனவர்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும் மற்றும் சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த குழாயை உடனடியாக அடைக்க வேண்டும் என பெரும்பாலான மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனிடையே சிபிசிஎல் ஆலை தொழிலாளர்கள் மூன்று, நான்கு முறை குழாயின் அடைப்பை சரி செய்தனர். இருந்தபோதிலும் கச்சா எண்ணெய் தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருந்தது.

இதைத்தொடர்ந்து சுத்த பணியில் ஈடுபட்டபோது மீண்டும் கச்சா எண்ணெய்யுடன் சேர்ந்து தண்ணீரும் வெளியேறியதால் அப்பகுதி மீனவர்கள் அச்சமடைந்து, இதற்கான முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் குழாயை அடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

 இந்நிலையில் இன்று நாகையிலுள்ள மீன்வளத்துறை அலுவலத்தில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் 7 கிராம மீனவர்களும், சிபிசிஎல் ஆலை நிர்வாகமும், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  

இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட சிபிசிஎல் எண்ணெய் குழாய்கள் மே 31க்குள் முழுமையாக அகற்றப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: