மகாராஷ்டிரா அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம்: வெங்காயத்திற்கு கூடுதல் மானியம் கேட்டு மும்பை நோக்கி பேரணி..!!

மகாராஷ்டிரா: வெங்காயத்திற்கு கூடுதல் மானியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாசிக்கிலிருந்து மும்பை நோக்கி விவசாயிகள் பிரமாண்ட பேரணி நடத்தி வருகின்றனர். ஆசியாவின் மிகப்பெரிய மொத்த வெங்காய சந்தையான நாசிக்கில் உரிய விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குவிண்டாலுக்கு ரூ.1,500 கேட்டு போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதுமட்டுமல்லாமல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாசிக்கிலிருந்து மும்பை நோக்கி 20,000 விவசாயிகள் கூட்டணியாக புறப்பட்டு சென்றனர். 170 கி.மீ தூரத்தை நடைபயணமாக கடந்து செல்லும் அவர்கள் வரும் 20ம் தேதி மும்பையில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்து வருவதால் அரசுக்கு எதிராக விவசாயிகள் வெங்காயத்தை நெருப்பிலிட்டு போராட்டம் நடத்தினர்.

விவசாயிகளை சமாதான படுத்தும் வகையில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஒரு குவிண்டால் வெங்காயத்திற்கு ரூ.300 மானியம் வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்தார். மேலும் நபாட் வங்கி மூலம் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார் ஆனால் போராட்டத்தை விவசாயிகள் தீவிரப்படுத்தி இருப்பதால் ஏக்நாத் ஷிண்டே அரசு செய்வதறியாது திணறி வருகிறது.

Related Stories: