வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுனர்

மும்பை: நாட்டில் ரயில் பயண நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவேக ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மகாராஷ்டிராவை சேர்ந்த சுரேகா யாதவ் வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் ரயில் ஓட்டுனர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் நேற்று மகாராஷ்டிராவின் சேலாப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மும்பையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினல் வரை வந்தே பாரத் ரயிலை இயக்கினார். இது குறித்து ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது டிவிட்டர் பதிவில், ‘‘வந்தே பாரத் - பெண் சக்தியால் இயக்கப்படுகின்றது. சுரேகா யாதவ் வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் முதல் பெண் லோகோ பைலட்” என குறிப்பிட்டுள்ளார்.

சதாராவை சேர்ந்த சுரேகா யாதவ் 1988ம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுனர் என்ற பெருமையை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: