குழந்தைககளுக்கு நிரந்தர வைப்பு நிதி சிலிண்டருக்கு ரூ.300 மானியம்: புதுவை பட்ஜெட்டில் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் அனைத்து  ரேஷன் அட்டைக்கும் ரூ.300 சிலிண்டர் மானியம், பெண்  குழந்தைகளுக்கு ரூ.50  ஆயிரம் டெபாசிட் என்பது உள்பட பல்வேறு சலுகைகளை முதல்வர் ரங்கசாமி  அறிவித்தார். புதுச்சேரி சட்டசபையில், நிதித்துறை பொறுப்பு  வகிக்கும்  முதல்வர் ரங்கசாமி 2023-24ம் ஆண்டுக்கான ரூ.11,600 கோடி பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள  அம்சங்கள் வருமாறு: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்  சமையல் எரிவாயு  சிலிண்டருக்கு  மாதம் ரூ.300 வீதம் ஆண்டுக்கு 12 சிலிண்டருக்கு  மானியம்  வழங்கப்படும். முதலமைச்சர்  பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் குழந்தை  பிறந்ததும் ரூ.50  ஆயிரம் தேசியமாக்கப்பட்ட வங்கியில் 18 ஆண்டு  காலத்துக்கு நிரந்தர வைப்பு  நிதியாக செலுத்தப்படும். வணிகர் நல   வாரியத்துக்கு இந்த நிதியாண்டு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

புதுச்சேரி   சாலை போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் உள்ளூர் பேருந்துகளில் அட்டவணை   இன(எஸ்சி, எஸ்டி) பெண்கள் இலவச பயணம் செய்ய வழிவகை செய்யப்படும்.

உலகில் பல்வேறு நாடுகளில்  தமிழ் வளர்ச்சிக்கு  பாடுபடும் தமிழ் அறிஞர்களை ஒருங்கிணைத்து உலக தமிழ்  மாநாடு நடத்தப்படும். அரசு மற்றும்  அரசு உதவி பெறும் பள்ளி  மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும். அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 12ம் வகுப்பு வரை   சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்படும். கலப்பு திருமண தம்பதிக்கு  ஊக்கத்தொகை ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும் என்பது   உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது.

Related Stories: