விளைநிலங்களில் புகும் காட்டுப்பன்றிகளை தடுப்பது எப்படி?.. வேளாண் மாணவிகள் விளக்கம்

ஆண்டிபட்டி: மதுரை அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் 4ம் ஆண்டு மாணவிகள் ஊரக வேளாண்மை திட்டத்தின் கீழ், ஆண்டிபட்டி வட்டாரத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். மறவப்பட்டி கிராமத்தில் நடந்த பயிற்சியில் விவசாயிகளுக்கு காட்டுப்பன்றி தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண் மாணவி லிசானியா விளக்கம் அளித்தார். மேலும் இதனை கட்டுப்படுத்த அரசின் 40 சதவீதம் மானியத்துடன் சூரிய மின்வேலி அமைக்கலாம்.

வாத்து முட்டையை நீரில் கலத்து தெளிக்கலாம். முடித் துண்டுகளை பரப்பி தூவும் முறைகளையும், ஒரு ஏக்கருக்கு 500 மில்லி விலங்கு விரட்டி உயிரி திரவம் பயன்படுத்துவதையும் கற்றுக் கொடுத்தார். இம்முறைகள் குறைந்த விலையில் பயன்படுத்தக்கூடிய உள்நாட்டு நுட்பமாகும். சுற்றுச்சூழலுக்கு பாதுக்காப்பான இம்முறைகள் 65 முதல் 105 நாட்கள் வரை வீரியம் கொண்டதாக இருக்கும். நெல், நிலக்கடலை, சிறுதானியம், கரும்பு போன்ற பயிர்களுக்கும் பயன்படுத்தலாம் என்று தெரிவித்தார்.

Related Stories: