திருச்சி பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு: பொதுத்தேர்வு மையங்களை பார்வையிட்டு மாணவர்களுக்கு வாழ்த்து..!!

திருச்சி: திருச்சியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்து வருகிறார். தமிழ்நாடு முழுவதும் 12ம் வகுப்பு பொதுதேர்வானது இன்று தொடங்கப்படவுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 133 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 16,802 மாணவர்கள், 17,590 மாணவிகள் என மொத்தம் 34,392 பேர் தேர்வு எழுதுகின்றனர். 133 தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், 20 வினாத்தாள் கட்டுப்பாட்டாளர்கள், 2407 தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் என சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் தேர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் தேர்வு மையங்களில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு செய்தார். பள்ளியில் எவ்வித ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, மாணவர்களுக்கான வசதிகள், குடிநீர் வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து தேர்வு மைய அதிகாரியிடம் ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். பின்னர் தேர்வு எழுத்தவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து கூறினார். எவ்வித அச்சமும், பதற்றமும் இன்றி தேர்வு எழுத வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

Related Stories: