பேரவை தேர்தலுக்கான நடைமுறைகள் தொடங்கியது தேர்தல் கமிஷன் குழு கர்நாடகா வருகை: அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை

பெங்களூரு: கர்நாடகா பேரவை தேர்தலுக்கான நடைமுறைகள் தொடங்கிய நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் குழுவினர் பெங்களூரு வந்துள்ளனர். அவர்கள் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் ெபாம்மை தலைமையிலானா பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் நிலையில், அடுத்த சில வாரங்களில் மாநிலத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தலைமைத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக தலைமை ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே மற்றும் அருண் கோயல் ஆகியோர் அடங்கிய குழு,  பெங்களூரு வந்தது.

அவர்கள் இன்று மாநில தலைமை செயலகமான விகாஸ் சவுதாவில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்துகின்றனர். மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா, காவல் துறை அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். அப்போது தேர்தலுக்கு முந்தைய ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து இன்று மாலை ஐஐஎஸ்சி வளாகத்தில் உள்ள டாடா ஹாலில், பெங்களூரு மாநகராட்சி சார்பில் நடைபெறும் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த கண்காட்சியில் அதிகாரிகள் குழுவினர் கலந்து கொள்கின்றனர்.

Related Stories: