தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா தலைமையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரத போராட்டம்

டெல்லி: பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு சட்டத்தை  உடனடியாக நிறைவேற்றக் கோரி டெல்லியில் தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் பல்வேறு கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 18க்கும் மேற்பட்ட கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  ஆம்ஆத்மி, சிவசேனா உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரதிநிதிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். நேற்று, மதுபான கொள்கை வழக்கில் கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவரை நேரில் ஆஜராகுமாறும் சம்மன் அனுப்பியிருந்த நிலையில் அவர் நேற்று ஆஜராகாத நிலையில், அதற்கு பதிலாக நாளை ஆஜராவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கவிதா தலைமையில் டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அவர் கூறுகையில், ஏற்கனவே இந்த மசோதா 2008ல் மாநிலங்களையிலும் 2010ல் மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் இந்த மசோதா கிடப்பில் உள்ளதாகவும், உடனடியாக பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

Related Stories: