இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா மாநாடு முதல்வர் ஸ்டாலின் இன்று சிறப்புரை

சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 75 ஆண்டு கால பயணத்தை சிறப்பிக்கும் வகையில், அகில இந்திய மாநாடு சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி, பல்வேறு சமயங்களை சேர்ந்த 75 ஜோடிகளுக்கு இலவச திருமணம், 2ம் நாளான நேற்று அகில இந்திய பிரதிநிதிகள் மாநாடு நடந்தது. இன்று (10ம் தேதி) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உருவான ராஜாஜி ஹாலில் உறுதிமொழி ஏற்பு, தியாகிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

மாலையில் கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கும் பவளவிழா மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமை வகிக்கிறார். கேரள தலைவர் சையத் சாதிக் அலி, கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவரும் தேசிய பொதுச்செயலாளருமான குஞ்ஞாலிக் குட்டி மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற இன்னாள், முன்னாள் உறுப்பினர்கள், பல்வேறு மாநில நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். இத்தகவலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் முகமது அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

Related Stories: