சித்தூர் ஆபத்தான நிலையில் இருக்கும் மின்சார டிரான்ஸ்பார்மரை உயரத்தில் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சித்தூர் :  சித்தூர் ஆபத்தான நிலையில் இருக்கும் மின்சார  ட்ரான்ஸ்பார்மரை உயரத்தில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சித்தூர் கிரீம்ஸ் பேட்டை பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்சார  டிரான்ஸ்பார்மர் வேறொரு பகுதிக்கு மாற்ற வேண்டும் அல்லது உயரத்தில் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பகுதி மக்கள் தெரிவிக்கையில், எங்கள் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நாள்தோறும் எங்கள் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள், கல்லூரி மாணவ-மாணவிகள், கூலி தொழிலாளர்கள் இவ்வழியாக கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் சித்தூர் மாநகரத்திற்கும் செல்ல வேண்டும். ஆனால் எங்கள் தெருவில் மிகவும் ஆபத்தான நிலையில் மின்சார ட்ரான்ஸ்ஃபார்மர் உள்ளது.

 இதனால் எங்கள் பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் குழந்தைகள் பள்ளிகளுக்கு கல்லூரிகளுக்கு சென்று வீடு திரும்பும் வரை உயிரை கையில் வைத்து காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் இதே டிரான்ஸ்பார்மர்ரில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு நாய் மற்றும் ஒரு பசு ஒரு ஆடு மின்சாரம் தாக்கி உயிர் இழந்தது இது குறித்து பலமுறை மின்சார துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்தோம் ஆனால் அதிகாரிகள் புகார் தெரிவிக்க செல்லும் போது ஓரிரு நாட்களுக்குள் மின்சார டிரான்ஸ்பார்மர் அகற்ற நடவடிக்கை எடுப்போம் அல்லது உயர் பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளிக்கிறார்கள்.

 ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது மின்சாரத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது உயரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Related Stories: