இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ.எம்.முகமது அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 75வது பவள விழா மாநாடு சென்னையில் 8, 9, 10 ஆகிய தேதிகளில் 3 நடக்கிறது. பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 8ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை ராயபுரத்தில் உள்ள ரஹ்மான் மஹாலில் பல்வேறு மதங்களை சேர்ந்த 75 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தப்படுகிறது. இதில், கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொகிதீன், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் உட்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

9ம் தேதி காலை 11 முணி முதல் 12 மணி வரை அகில இந்திய பிரதிநிதிகள் மாநாடு நடக்கிறது. 10ம்தேதி கட்சிக்காக 75 ஆண்டுக்கு மேலாக தியாகம் செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. மாலையில் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் பவள விழா பொது மாநாடு நடைபெறுகிறது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டில், முக்கிய தீர்மானங்கள் மற்றும் பாராளுமன்ற தேர்தலையொட்டி முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. மாநாடு நிறைவு விழா நிகழ்ச்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமை தாங்குகிறார்.

Related Stories: