அல்கொய்தா, தாலிபன்கள் போல் அமலாக்கத்துறை, சிபிஐ செயல்பாடுகளை கொண்டு எதிர்க்கட்சித் தலைவர்களை பழிவாங்கும் ஒன்றிய அரசு: சஞ்சய் ராவத் சாடல்

மும்பை: அமலாக்கத்துறை, சிபிஐ விசாரணை அமைப்புகளை அல்கொய்தா, தாலிபன்களுடன் ஒப்பிட்டு சிவசேனா உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த சஞ்சய் ராவத் விமர்சனம் செய்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; நாடு முழுவதும் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புகளை கொண்டு மக்களை ஒன்றிய அரசு பயமுறுத்தி வருவதாக கூறினார். அல்கொய்தா மற்றும் தாலிபன்கள் தங்களது எதிரிகளை ஒழிப்பதற்காக ஆயுதங்களை எடுத்தது போன்று அமலாக்கத்துறை, சிபிஐ அமைப்புகளை ஆட்சியாளர்கள் தங்களது நலன்களுக்காக பயன்படுத்தி வருவதாக சஞ்சய் ராவத் குற்றம் சாட்டினார்.

டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியவை சிபிஐ கைது செய்த பிறகு பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டமாக கடிதம் எழுதினர். அந்த கடிதத்தில் ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி முறைக்கு அச்சுறுத்தல் விடப்பட்டு உள்ளது. ஒரு ஜனநாயக நாட்டில் மக்களின் தீர்ப்பே இறுதியான ஒன்றாக உள்ளது. உங்களுடன் முரண்பட்ட கொள்கையை கொண்ட ஒரு கட்சியாக இருந்தாலும், மக்கள் அவர்களுக்கு ஆதரவாக அளித்த தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும் என தெரிவித்து உள்ளது. நாம் ஜனநாயக நாடு என்பதில் இருந்து சர்வாதிகார போக்கிற்கு மாறி கொண்டிருக்கிறோம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், விசாரணை அமைப்புகளை பழி வாங்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்த கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டனர். இந்த சூழலில் சஞ்சய் ராவத் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Related Stories: