பெரியார் பல்கலை பதிவாளரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

சேலம்:  பெண் ஊழியருக்கு பணி வழங்காததால் சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை கைது செய்ய சேலம் தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் ரெட்டிப்பட்டி நகரமலை அடிவாரத்தை சேர்ந்தவர் தெய்வராணி (53). இவர் கடந்த 1998ல் பெரியார் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுப்பாட்டு பிரிவில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தார். கடந்த 2002ல் தினக்கூலி வேலை எனக் கூறி அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனை எதிர்த்து சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, அவரை பணியில் சேர்த்துக்கொள்ள  2013ல் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. ஆனால் அவருக்கு வேலையும் கொடுக்கவில்லை, சம்பளமும் வழங்கவில்லை. இதையடுத்து அவர் நீதிமன்ற உத்தரவை மதிக்காத பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மீண்டும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சேலம் தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி சுமதி, பல்கலை. பதிவாளரை கைது செய்ய உத்தரவிட்டதுடன் வழக்கை வருகிற 5ம்தேதிக்கு தள்ளி வைத்தார்.

Related Stories: