திருப்போரூர் கந்தசாமி கோயில் சரவண பொய்கையில் தெப்ப உற்சவம்

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசாமி கோயில் சரவணப் பொய்கையில் தெப்ப உற்சவத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருப்போரூர் கந்தசுவாமி கோயிலின் மாசி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 3ம் தேதி தேரோட்டமும், 5ம் தேதி அன்று ஆலத்தூர் கிராமத்தில் பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, 10ம் நாள் உற்சவமாக தெப்ப உற்சவம் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. கோயிலை ஒட்டி உள்ள சரவணப் பொய்கையில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தெப்பம் குளத்தில் 3 முறை வலம் வந்தது. அப்போது, ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் குளத்தில் வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி, மிதக்க விட்டு வழிபட்டனர்.

Related Stories: