ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

ராமநாதபுரம்: ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. மே 31ல் சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகீம் ஷாகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்கா அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு திருவிழா சமூக நல்லிணக்கம், ஒருமைப்பாடு திருவிழாவாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு 850வது சந்தனக்கூடு திருவிழா கடந்த 9ம் தேதி மவுலீது ஓதப்பட்டு விழா துவங்கியது. நேற்றுமுன்தினம் தர்கா மண்டபத்திற்கு எதிரே கொடிமரம் மேடையில் அடிமரம் ஏற்றப்பட்டது.

ஏர்வாடி குடியிருப்பு பகுதியிலிருந்து கொடி ஊர்வலம் நேற்று மாலை புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து தர்காவை அலங்கார ரதம் மூன்று முறை வலம் வந்தது. பின்னர் சிறப்பு பிரார்த்தனைக்கு பின்னர் கொடி ஏற்றப்பட்டது. இதில் பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் வரும் 31ம் தேதி மாலை தொடங்கி, மறுநாள் ஜூன் 1ம் தேதி அதிகாலை வரை நடைபெறும். அப்போது யானை, குதிரை அணிவகுப்பு, சந்தனக்கூடு பவனி, சந்தனம் பூசும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும். ஜூன் 7ம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும்.

The post ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: