ஊட்டி பூங்காவில் பூத்து குலுங்கும் ரோஜா மலர்கள் : சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி: ஊட்டி ரோஜா பூங்கா முதல் பாத்தியில் பல வண்ணங்களில் ரோஜா மலர்கள் பூத்துள்ளதால் அதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். கோடை  சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில்  உள்ள அனைத்து பூங்காக்களையும் மேம்படுத்தும் பணிகள் மற்றும்  பொலிவுப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

ஊட்டியில் உள்ள அரசு  தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவை கண்காட்சிகளுக்காக தயார்  செய்யப்பட்டு வருகின்றன. ரோஜா பூங்காவில் கடந்த இரு மாதங்களாக மேம்பாட்டு  பணிகள் ேமற்ெகாள்ளப்பட்டு வருகிறது. கோடை சீசனுக்காக பூங்காவில் உள்ள  பெரும்பாலான செடிகள் கவாத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், பூங்காவில்  உள்ள முக்கிய பாத்திகளில் மலர்கள் இன்றி காணப்படுகிறது. அதேசமயம், கடந்த  இரு மாதங்களுக்கு முன் பூங்காவில் உள்ள முதல் பாத்தி மற்றும் 3வது  பாத்தியில் உள்ள செடிகள் கவாத்து செய்யப்பட்டது.

அதில், தற்போது பல வகையான  மற்றும் பல வண்ணங்களில் ரோஜா மலர்கள் பூத்து குலுங்குகிறது. குறைந்த  இடத்தில் மட்டுமே மலர்கள் பூத்துள்ள ேபாதிலும், இதனை சுற்றுலா பயணிகள்  கண்டு ரசித்து செல்கின்றனர். தாவரவியல் பூங்கா உட்பட மற்ற பூங்காக்கள்  மலர்கள் இன்றி காணப்படுகிறது. தற்போது ேராஜா பூங்காவில்  பூத்துள்ள இந்த வண்ண மிகு ரோஜா மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து  வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் மற்ற செடிகளிலும் மலர்கள் பூத்துவிடும்.  அதுவரை இந்த மலர்களே சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும்.

Related Stories: