சென்னை மதுரவாயிலில் 9-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை மதுரவாயிலில் 9-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் இவரது மகள் மோனிகா இவர் சின்ன போரூரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கபடி வீராங்கனையாக இருந்துள்ளார்.

மோனிகா சில தினங்களாக தனது தோழிகளுடன் சேர்ந்து செல்போனில் அதிகமாக செல்போனில் பேசி வருகிறார் என்று பள்ளி நிர்வாகம் மோனிகாவின் பெற்றோர்களை அழைத்து கண்டித்துள்ளனர். இதனை தொடர்ந்து இதே போல் செயல்பட்டால் கபடி அணியில் சேர்த்து கொள்ளமாட்டோம் என்று பள்ளி நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதனால் மனமுடைந்த மாணவி மோனிகா விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி மோனிகா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை கண்ட பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மாணவியை இறக்கி கொண்டுவந்தனர். இதன் பிறகு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

Related Stories: