தலைமறைவான 53 குற்றவாளிகள் கோர்ட்டில் ஆஜர்: போலீசார் அதிரடி

சென்னை: சென்னை மாநகரம் முழுவதும் நேற்று முன்தினம் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்து வந்த 3 ரவுடிகள் உட்பட 53 குற்றவாளிகளை போலீசார் பிடித்தனர். பிறகு அனைவரையும் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தி நீதிமன்ற பிடியாணை நிறைவேற்றப்பட்டது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ‘காவல் உதவி செயலி’ குறித்து அந்தந்த உதவி கமிஷனர்கள் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் விழிப்புணர்வு நடத்தப்பட்டது. அதன்படி 61 பள்ளிகள், 14 கல்லூரிகள், 40 பேருந்து நிறுத்தங்கள், 6 ரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் 24 இடங்கள் என மொத்தம் 155 இடங்களில் காவல் உதவி செயலி பதிவிறக்கம் செய்வது, எப்படி புகார் அளிப்பது குறித்து விரிவாக விளக்கி விழிப்புணர்வு செய்யப்பட்டது.

Related Stories: