தலைமை நீதிபதியுடன் வக்கீல் சங்க தலைமை மோதல்: உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தில் நேற்று  தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் ஆஜரான, உச்சநீதிமன்ற வக்கீல்கள் சங்க தலைவர் விகாஸ் சிங், ‘‘வக்கீல்கள் சங்கத்துக்கு நிலம் ஒதுக்கீடு செய்வது தொடர்பான வழக்கை பட்டியலிடுவதற்காக கடந்த 6 மாதங்களாக முயன்று வருகிறேன். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவியில் இருந்தபோதே, கட்டுமான பணிகள் துவங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை வழக்கை  பட்டியலிட முடியவில்லை. என்னை ஒரு சாதாரண வழக்காடுபவராக கருதி இதை உடனே பட்டியலிட வேண்டும்’’ என கோரினார்.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்,‘‘ நீங்கள் இது போல் எல்லாம் கோரிக்கை வைக்கக் கூடாது. ஒரு நாள் முழுவதும் நாங்கள் சும்மா இருக்கிறோமா சொல்லுங்கள்’’ என்றார். அதற்கு பதிலளித்த விகாஸ் சிங்,‘‘ இந்த விவகாரத்தை பட்டியலிடும்படிதான் கோரினேன். இதை உடனடியாக செய்யாவிட்டால் செலவு மேலும் அதிகரிக்கும்’’ என்றார். இதில் கோபமடைந்த தலைமை நீதிபதி, ‘‘தலைமை நீதிபதியையே மிரட்டுகிறீர்களா, இது போன்றுதான் நீதிமன்றத்தில் நடந்து ெகாள்வீர்களா. வக்கீல்களின் தலைவராக உள்ள நீங்கள் வக்கீல்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். இதுபோன்று செயல்பட்டால் இதை பட்டியலிப்பட போவது இல்லை. இந்த நடவடிக்கைகள் எனக்கு பிடிக்காது. தயவு செய்து இங்கிருந்து சென்று விடுங்கள்’’ என்று கூறினார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் வக்கீல்கள் சங்க தலைவருக்கும் இடையே நடந்த காரசார விவாதம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: