புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஜனவரியில் 29 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டன. சமூக ஊடகங்களில் ஒன்றான வாட்ஸ்அப் கோடிக்கணக்கான பயனாளர்களைக் கொண்டுள்ளது. மாதம் தோறும் பயனாளர் பாதுகாப்பு அறிக்கையை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. ஒன்றிய அரசு அமல்படுத்திய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, இந்தியாவில் 50 லட்சத்திற்கும் கூடுதலான பயனர்களைக் கொண்ட சமூக வலைதளங்கள், ஒவ்வொரு மாதமும் தங்களது பயனாளர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்கள் மற்றும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி அறிக்கையாக வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் 29 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது.