குஜராத்தில் ஆஸி.பல்கலைகழக வளாகங்கள்: அமைச்சர் தகவல்

புதுடெல்லி: குஜராத்தின் கிப்ட் சிட்டியில் ஆஸ்திரேலியாவின் 2 பல்கலைகழக வளாகங்கள் விரைவில் திறக்கப்படும் என ஒன்றிய கல்வி அமைச்சர் தெரிவித்தார். டெல்லி வெங்கடேஸ்வரா கல்லூரி விழாவில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் ஆஸ்திரேலிய கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர் கலந்து கொண்டனர். இதில் தர்மேந்திர பிரதான் பேசுகையில்: ‘‘ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற டீகின் பல்கலைகழகம்,வோலோன்காங்க் ஆகிய பல்கலைகழகங்களின் வளாகங்கள் குஜராத்தில் உள்ள சர்வதேச நிதி மற்றும் தொழில்நுட்ப நகரில் (கிப்ட் சிட்டி) அமைய உள்ளன.  அடுத்த வாரம் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் இந்தியா வரும்போது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது’’ என்றார்.

Related Stories: