ஊழல் வழக்கில் கைதான சிசோடியா நேர்மையானவர்: பாஜ முன்னாள் முதல்வர் சொல்கிறார்

சிம்லா:  மணிஷ் சிசோடியா நேர்மையானவர் என்று பாஜவை சேர்ந்த முன்னாள் முதல்வர் சாந்தகுமார்  கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கையை ெகஜ்ரிவால் அரசு அமல்படுத்தியது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும்  குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த ஊழல்  தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ கடந்த 26ம் தேதி டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை  செய்தது. இந்நிலையில், இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வரும் மூத்த பாஜ தலைவருமான சாந்தகுமார் இது பற்றி முகநுாலில்  பதிவிட்டுள்ளதாவது:

டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இன்றி துாய்மையான நபராக வலம் வந்த மணிஷ் சிறப்பான பணிகளை செய்துள்ளார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இரண்டு தரப்பில் இருந்தும் மாறி மாறி குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. எந்த ஒரு குற்றமும் செய்யாமல் சிசோடியாவை சிபிஐ கைது செய்துள்ளது என்று கூறுவதையும் ஏற்க இயலாது. என்னை பொறுத்தவரைக்கும் மணிஷ் சிசோடியா  நேர்மையானவர். கட்சிக்காகவும், தேர்தலுக்காகவும் அவர் இதை செய்திருக்கக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.  மணிஷ் சிசோடியாவுக்கு ஆதரவாக சாந்தகுமார் கருத்து தெரிவித்துள்ளது பாஜவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: